தேவையான பொருள்கள்:
இஞ்சி -500கி
பூண்டு -750கி
உப்பு -3 ஸ்பூன்
சமையல் எண்ணெய் - 4ஸ்பூன்
கண்ணாடி(அ) ப்ளாஸ்டிக் பாட்டில்- 2
செய்முறை;
இஞ்சி,பூண்டு இரண்டையும் நன்றாக கழுவி தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
தோல் நீக்கிய இஞ்சி,பூண்டை சிறிய துண்டுகளாக நறுக்கி அதை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக மை போல் அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் உப்பை போட்டு மிதமான தீயில் உப்பின் நிறம் மாறாமல் சூடு பதம் வரும் வரை வறுத்து தனியே எடுத்து தட்டில் ஆற வைக்கவும்.
பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த இஞ்சி ,பூண்டு விழுதை போட்டு சூடுபடுத்தவும்.
இஞ்சி,பூண்டு விழுதின் ஈரப்பதம் குறைந்து ,விழுதானது சடசடவென சப்தம் வரும் வரை சூடுபடுத்திய பின் நன்றாக ஆறவைக்கவும்.
சூடுபடுத்தி ஆறிய விழுதில் வறுத்த உப்பை போட்டு கலந்த பின்னர் ,விழுதை இரண்டு பாட்டில்களில் தனி தனியே போட்டு வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாட்டிலை ப்ரிட்ஜின் பரீசரிலும், மற்றுமொரு பாட்டிலை ப்ரிட்ஜின் காய்கறி வைக்கும் பாகத்தில் வைத்து தேவைப்படும் நேரங்களில் பயன்படுத்தி கொள்ளலாம்.
குறிப்பு:
இஞ்சி, பூண்டின் நிறம் பச்சையாக மாறும் காரணங்கள்:
1. இஞ்சி,பூண்டு சிறிது கூட தோல் இல்லாமல் உரித்து பயன்படுத்த வேண்டும்.
2. அரைத்து பதப்படுத்திய இஞ்சி ,பூண்டு விழுதில் தேவைப்படும் சமயங்களில் மட்டுமே கரண்டியை உபயோகப்படுத்த வேண்டும்.
தேவைப்படாத சமயங்களில் கரண்டியை இஞ்சி,பூண்டு விழுதில் போட்டு வைத்தால் விழுதின் கலர் பச்சையாக மாற வாய்ப்புகள் அதிகம்.
இஞ்சி, பூண்டை தோல் நீக்கியவுடனே அரைத்து பேஸ்ட் தயாரிக்க வேண்டும். இல்லையென்றால் விழுதின் கலர் மாற வாய்ப்புகள் அதிகம் அதிகமே.
இஞ்சி,பூண்டை அரைக்கும்போது சிறிதும் தண்ணீர் சேர்க்கவே கூடாது.