திங்கள், 19 ஏப்ரல், 2010

மனநோயாளிகள்

கூத்தாடிகளையும்(இவிங்களுக்கு உண்மையான கூத்துகரர்கள் எவ்வளவோ மேல்) கிரிக்கெட் வீரர்களையும் (இவிங்க என்னத்த சாதிச்சங்கன்னு வீரர்கள் கூப்பிடுரோம்னு தெரியல) வைத்து நம்மை மூளை சலவை செய்து நம்முடைய தேவைக்கும் அதிகமாக பொருட்களை வாங்கவைத்து கடன்காரர்கள் ஆக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் நம்மை அடிமைகளாகவும் மனநோயாளிகளாகவும் ஆக்கிவிட்டன.... (தேவைக்கும் அதிகமாக ஷாப்பிங் போவதும் ஒரு மன நோய்தான்..)


இந்த மாதிரி ஆட்கள் மனநோயாளிகள் என்பதும் சமூக அக்கறை என்பதே இல்லை என்பது ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் வெட்ட வெளிச்சமானது.. அதுவும் எப்படி என்றால் சோத்துக்கும் துணிக்கும் சக மனிதர்கள் கஷ்டபட்டால் அது அவர்கள் தலை எழுத்து.. அதற்காக எங்களை நாங்கள் மாற்றி கொள்ள முடியாது. நாங்கள் ௨00 தோடு வாங்குவோம், விதவிதமா காபி கப் வாங்குவோம் என்று சொல்லும் அளவுக்கு... அவங்களுக்கு எங்கள பாத்தா பொறாமை... ஆனா இவிங்களுக்கு மத்த மேல்தட்டு வர்க்கத்த பாத்து பொறாமை என்பது வேற கதை..

1 கருத்து:

  1. தாங்களின் ஆதங்கம் விளங்குகிறது தோழரே. என்ன செய்வது சக மனிதரை மனிதராக பார்க்கும் மனிதர்கள் குறைந்துவிட்டனர். நவீன உலகத்திற்கு நாம் கொடுத்த விலை மனிதம் மரித்துபோனதுதான்.

    பதிலளிநீக்கு