சனி, 24 ஏப்ரல், 2010

ஐ பி எல் அடிமைகள் / கிறுக்கர்கள்

பதிவுலகிலும், ஊடகங்களிலும் கிழிக்கப்பட்டு நாறிகொண்டிருக்கும் ஐ பி எல்- ஐ பற்றிய மற்றுமொரு பதிப்பு... கூத்தாடிகளும், பெரும் பண முதலைகளும் நம்முடைய கிரிக்கெட் பைத்தியத்தை காசு பார்க்கும் வியாபாரமாக்கிவிட்டதை நாம் இன்னும் உணரவில்லை... கிரிக்கெட் மேல் அரை கிறுக்கர்களாய் இருந்த நம்மை பெரும் பைத்தியகாரர்களாய் மாற்றிய பெருமை இந்த லலித் மோடி என்ற புரோக்கர் மற்றும் வியாபாரிக்கே சேரும்.. (இதுவும் இவருடைய சொந்த சரக்கு அல்ல) அடிமைகளாய் இருப்பதில் நம்மவர்களுக்கு உள்ள சுகம் வேறு எதிலும் இல்லை...

அடிமைகள் விளையாடும் (ஏலம் போட்டுதான இவிங்கள எடுத்தாங்க.. ஒரு களத்தில் ஆப்ரிக்க அடிமைகள வெள்ளைகாரர்கள் ஏலம் எடுத்ததை போல) இவர்களை வீரர்கள் என்று சொல்வது உண்மையில் நாட்டை காக்கும் வீரர்களுக்கு இழுக்கு.. இந்த அடிமைகள் அணிக்காகவும் அவர்களின் உரிமையாளர்களான கூத்தாடிகள், பண முதலைகள் சம்பாதிக்க இங்கே தூக்கத்தை மறந்து, உணவை மறந்து, உறவுகளை மறந்து பைத்தியமாய் கத்தி
வெறிகொண்டு, நட்பை துண்டாக்கி , கேவலமாய் சண்டையிட்டு, இரத்த அழுத்தத்தை ஏற்றி கொள்ளும் இந்த பைத்தியங்களை என்ன செய்வது ..

எந்த இடத்தில் அளவுக்கு அதிகமாய் பணபுழக்கம் உள்ளதோ அங்கெல்லாம் ஊழலும், கயமைத்தனமும் நிச்சயம் இருக்கும் என்பது இப்பொழுது ஐ பி எல்லில் நடக்கும், நடந்த விஷயங்கள் எல்லோருக்கும் புரிந்திருக்கும்....



கிறுக்கர்களே நீங்கள் திருந்தும் நாள் எப்போது....

திங்கள், 19 ஏப்ரல், 2010

மனநோயாளிகள்

கூத்தாடிகளையும்(இவிங்களுக்கு உண்மையான கூத்துகரர்கள் எவ்வளவோ மேல்) கிரிக்கெட் வீரர்களையும் (இவிங்க என்னத்த சாதிச்சங்கன்னு வீரர்கள் கூப்பிடுரோம்னு தெரியல) வைத்து நம்மை மூளை சலவை செய்து நம்முடைய தேவைக்கும் அதிகமாக பொருட்களை வாங்கவைத்து கடன்காரர்கள் ஆக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் நம்மை அடிமைகளாகவும் மனநோயாளிகளாகவும் ஆக்கிவிட்டன.... (தேவைக்கும் அதிகமாக ஷாப்பிங் போவதும் ஒரு மன நோய்தான்..)


இந்த மாதிரி ஆட்கள் மனநோயாளிகள் என்பதும் சமூக அக்கறை என்பதே இல்லை என்பது ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் வெட்ட வெளிச்சமானது.. அதுவும் எப்படி என்றால் சோத்துக்கும் துணிக்கும் சக மனிதர்கள் கஷ்டபட்டால் அது அவர்கள் தலை எழுத்து.. அதற்காக எங்களை நாங்கள் மாற்றி கொள்ள முடியாது. நாங்கள் ௨00 தோடு வாங்குவோம், விதவிதமா காபி கப் வாங்குவோம் என்று சொல்லும் அளவுக்கு... அவங்களுக்கு எங்கள பாத்தா பொறாமை... ஆனா இவிங்களுக்கு மத்த மேல்தட்டு வர்க்கத்த பாத்து பொறாமை என்பது வேற கதை..