சனி, 22 மே, 2010

தாய் அன்பு

அரபுநாடுகள் ஒன்றில் திரவியம் தேடிக் கொண்டிருக்கும் நான் என் நண்பரோடு அவருடைய காரில் வரும்போது ஆடியோ கேசட்டை போட்டார்... அது பத்து வருடங்களுக்கு முன் தாய் பேசி அனுப்பியது... அந்த சமயத்தில் செல்போன், பப்ளிக் போன் பெரிதாக புழக்கத்தில் இல்லாத நேரம்.. கடிதமோ இல்லை, இந்த மாதிரி ஊருக்கு செல்வபர்கள் அல்லது வருபவர்களிடம் ஆடியோ கேசட்டில் பேசி அனுப்பும் (வீரப்பன்) டெக்னிக்கை நாங்கள் பின்பற்றிய நேரம்......

அதில் நண்பரின் குடும்பத்தார் பேசி இருந்தார்கள். அது தொலைபேசியில் பேசினால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு நெருக்கத்தை உணர்த்துவதாக இருந்தது.

" என்ன ராசா எப்படிப்பா இருக்க, உடம்புக்கெல்லாம் எப்படி இருக்கு, நல்லா சாப்புடுப்பா" அதில் நண்பருடைய தாயின் குரலில் இருந்த பரிதவிப்பும், அக்கறையும் பாசமும் கேட்பவர்களை உருக்கும் வகையில் இருந்தது... மகனை பொருள் தேட அனுப்பி விட்டு, நேரில் பார்க்க இயலாத பரிதவிப்பான குரல் மனதை என்னவோ செய்தது...

ஒவ்வொரு பத்து வார்த்தைகளுக்கும் மகனின் உடல்நலத்தை விசாரித்த அந்த தாய்ப்பாசம்... நல்லா சாப்புடுப்பா!!! என்ற சொன்ன சொல்லில் பிள்ளையின் பசி அறிந்த தாயின் தவிப்பு தெரிந்தது...

தனக்கு தெரிந்த எல்லா கடவுள்களையும் தன் மகனின் தலைமாட்டில் இருந்து காவல் காக்க உத்தரவிட்ட அந்த குரலில் மகனை பற்றிய அக்கறை தெரிந்தது. நடு நடுவே அவசர பணதேவைக்காகவும் மகனின் எதிர்காலத்திர்க்காகவும் தான் இந்த பிரிவு என்று சமாதான வார்த்தைகளை தனக்கும் மகனுக்கும் சிறிய குற்ற உணர்ச்சியோடு சொல்லிக் கொண்டது அந்த தாய் மனது.. நண்பரின் நண்பருக்கும் சேர்த்து கடவுளை வேண்டிக்கொண்ட அந்த தாய் " என் மகனை பாத்துக்கப்பா " என்று சொல்ல தவறவில்லை...

என் மகனுக்கு நான் எதுவும் சொல்ல தேவையில்லை அவனுக்கு யெல்லாம் தெரியும் என்ற பெரிமிதத்தொடு பிரிவில் தடுமாறிய இரண்டொரு வார்த்தைகளோடு பெரிதாய் அறிவுரை சொல்லாத அந்த தகப்பனின் பாசத்திற்கு முன்னால் எதுவும் பெரியதாய் தோன்றாது..

அப்பா, அம்மாவை நாங்க பாத்துக்குறோம், நீ கவலைபடாத!! என்று சொன்ன சகோதரியின் வார்த்தைகளில் " நீ இல்லாம நாங்க என்ன போறமோ" என்ற வருத்தம் தெரிந்தது..

இறுதியில் ஒரு கலங்க வைக்கும் சிறுகதையை ஆடியோ கேசட்டில் கேட்ட உணர்வோடு " நாளைக்கு அம்மாவுக்கு போன் பண்ணனும்" என்ற நினைவோடு உறங்க சென்றேன்...

சனி, 24 ஏப்ரல், 2010

ஐ பி எல் அடிமைகள் / கிறுக்கர்கள்

பதிவுலகிலும், ஊடகங்களிலும் கிழிக்கப்பட்டு நாறிகொண்டிருக்கும் ஐ பி எல்- ஐ பற்றிய மற்றுமொரு பதிப்பு... கூத்தாடிகளும், பெரும் பண முதலைகளும் நம்முடைய கிரிக்கெட் பைத்தியத்தை காசு பார்க்கும் வியாபாரமாக்கிவிட்டதை நாம் இன்னும் உணரவில்லை... கிரிக்கெட் மேல் அரை கிறுக்கர்களாய் இருந்த நம்மை பெரும் பைத்தியகாரர்களாய் மாற்றிய பெருமை இந்த லலித் மோடி என்ற புரோக்கர் மற்றும் வியாபாரிக்கே சேரும்.. (இதுவும் இவருடைய சொந்த சரக்கு அல்ல) அடிமைகளாய் இருப்பதில் நம்மவர்களுக்கு உள்ள சுகம் வேறு எதிலும் இல்லை...

அடிமைகள் விளையாடும் (ஏலம் போட்டுதான இவிங்கள எடுத்தாங்க.. ஒரு களத்தில் ஆப்ரிக்க அடிமைகள வெள்ளைகாரர்கள் ஏலம் எடுத்ததை போல) இவர்களை வீரர்கள் என்று சொல்வது உண்மையில் நாட்டை காக்கும் வீரர்களுக்கு இழுக்கு.. இந்த அடிமைகள் அணிக்காகவும் அவர்களின் உரிமையாளர்களான கூத்தாடிகள், பண முதலைகள் சம்பாதிக்க இங்கே தூக்கத்தை மறந்து, உணவை மறந்து, உறவுகளை மறந்து பைத்தியமாய் கத்தி
வெறிகொண்டு, நட்பை துண்டாக்கி , கேவலமாய் சண்டையிட்டு, இரத்த அழுத்தத்தை ஏற்றி கொள்ளும் இந்த பைத்தியங்களை என்ன செய்வது ..

எந்த இடத்தில் அளவுக்கு அதிகமாய் பணபுழக்கம் உள்ளதோ அங்கெல்லாம் ஊழலும், கயமைத்தனமும் நிச்சயம் இருக்கும் என்பது இப்பொழுது ஐ பி எல்லில் நடக்கும், நடந்த விஷயங்கள் எல்லோருக்கும் புரிந்திருக்கும்....



கிறுக்கர்களே நீங்கள் திருந்தும் நாள் எப்போது....

திங்கள், 19 ஏப்ரல், 2010

மனநோயாளிகள்

கூத்தாடிகளையும்(இவிங்களுக்கு உண்மையான கூத்துகரர்கள் எவ்வளவோ மேல்) கிரிக்கெட் வீரர்களையும் (இவிங்க என்னத்த சாதிச்சங்கன்னு வீரர்கள் கூப்பிடுரோம்னு தெரியல) வைத்து நம்மை மூளை சலவை செய்து நம்முடைய தேவைக்கும் அதிகமாக பொருட்களை வாங்கவைத்து கடன்காரர்கள் ஆக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் நம்மை அடிமைகளாகவும் மனநோயாளிகளாகவும் ஆக்கிவிட்டன.... (தேவைக்கும் அதிகமாக ஷாப்பிங் போவதும் ஒரு மன நோய்தான்..)


இந்த மாதிரி ஆட்கள் மனநோயாளிகள் என்பதும் சமூக அக்கறை என்பதே இல்லை என்பது ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் வெட்ட வெளிச்சமானது.. அதுவும் எப்படி என்றால் சோத்துக்கும் துணிக்கும் சக மனிதர்கள் கஷ்டபட்டால் அது அவர்கள் தலை எழுத்து.. அதற்காக எங்களை நாங்கள் மாற்றி கொள்ள முடியாது. நாங்கள் ௨00 தோடு வாங்குவோம், விதவிதமா காபி கப் வாங்குவோம் என்று சொல்லும் அளவுக்கு... அவங்களுக்கு எங்கள பாத்தா பொறாமை... ஆனா இவிங்களுக்கு மத்த மேல்தட்டு வர்க்கத்த பாத்து பொறாமை என்பது வேற கதை..

சனி, 20 பிப்ரவரி, 2010

தாய்மொழி தின வாழ்த்துக்கள் ---------- பெப்ரவரி 21

வியாழன், 11 பிப்ரவரி, 2010

வள்ளுவனின் மூன்றாம் பாலில் உதித்த

என் முத்தமிழே!!

அவ்வையின் ஆத்திசூடியாய்

என் வாழ்வில் வந்த அருந்தமிழே!!!!

கம்பனின் கவியாய்

என்னை களிப்பாக்கும் கவித்தமிழே!!!

பாரதியின் வாய்ச்சொல்லாய்

என்னை வசப்படுத்தும் செம்மொழியே!!

தாசனின் அழகின் சிரிப்பாய் சிலிர்க்க வைக்கும்

என் சிந்தனை மொழியே !!!!

உன் இனிக்கும் மழலைச் சொல்லால்

என் மனம் மயக்கும் இசைத்தமிழே!!!

சனி, 23 ஜனவரி, 2010

பாத்திரம் நிறைய பாலில் ஒரு துளி நஞ்சாய் - என் மனதில்
அந்த காதல் நுழைந்தது !!!
உள்ளே சென்ற ஒரு துளி
உடன் பெருகியது பலமடங்காய் - என்
உறக்கத்தை கெடுத்தது!!!
உணர்வை பறித்தது!!!
உணவை மறித்தது
மன வைத்தியங்கள் செய்து பார்த்தேன்
மசியவில்லை அந்நஞ்சு!!
நட்பு வைத்தியர்கள் சொன்ன
கைவைத்தியமும் பலனில்லை!!!
முடிவில் நஞ்சை நஞ்சால் முறிக்க
முடிவு செய்தேன்!!!

செவ்வாய், 19 ஜனவரி, 2010

யாரையும் தெரியாத ஊரில்
எதை எதிர்பாராத நட்பிற்கிடையில்
தேவையான அளவு மட்டுமே ஊதியம் கொடுக்கும்
தனித்துவமான வேலையில்
மனமொன்றி செய்ய தூண்டும்
திருப்திகரமான ஊழியத்தில்
மலையும் கடலும் சார்ந்த
மனமயக்கும் இருப்பிடத்தில்
திருப்தியான உணவும்
நிம்மதியான உறக்கமும் - கிடைக்கபெற
நடுவில் ஒரு நாள்
உயிர்விடும் ஆசை உண்டு - ஏனென்றால்
இறுதி நாட்களில்
ஒரு துணை தேடும் வாய்ப்பு உண்டு!!!



திங்கள், 4 ஜனவரி, 2010

வேனிற் கால மாலை காற்று

என்னை குளிர வைத்தது போல் ...

குளிர் கால உன் மூச்சுக் காற்று

என்னை குளிர வைக்கவில்லை ஏன்!!!!!