வியாழன், 11 பிப்ரவரி, 2010

வள்ளுவனின் மூன்றாம் பாலில் உதித்த

என் முத்தமிழே!!

அவ்வையின் ஆத்திசூடியாய்

என் வாழ்வில் வந்த அருந்தமிழே!!!!

கம்பனின் கவியாய்

என்னை களிப்பாக்கும் கவித்தமிழே!!!

பாரதியின் வாய்ச்சொல்லாய்

என்னை வசப்படுத்தும் செம்மொழியே!!

தாசனின் அழகின் சிரிப்பாய் சிலிர்க்க வைக்கும்

என் சிந்தனை மொழியே !!!!

உன் இனிக்கும் மழலைச் சொல்லால்

என் மனம் மயக்கும் இசைத்தமிழே!!!

10 கருத்துகள்:

  1. உன் கவிதையை படித்ததும் பாராட்ட வார்த்தை தேடினேன் கிடைக்கவில்லை நண்பா. கரணம் படித்து முடித்ததும் என் மனதில் நிறைந்தது என் மகள் மட்டுமே, உன் கவிதையை போல.

    அருமை நண்பா. தொடரட்டும் உன் எண்ணங்களின் எழுத்தாக்கம்!!!!
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. அருமை !! உங்கள் பதிவுல பணி தொடர வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  3. அருமை. தாய் மொழி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. சைந்தவியின் கடைசி கடிதம்...(என் நண்பன் ரெட்டைவால்ஸின் எழுத்தில்...)
    http://rettaivals.blogspot.com/2010/03/wo.html#comments

    பதிலளிநீக்கு
  5. மதுரை சரவணன் அண்ணே... நன்றி... உங்களின் மறுமொழியின் மூலம் என்னை ஊக்கபடுத்தியதற்கு

    பதிலளிநீக்கு
  6. அய்யா, வெளியூர்காரரே... நன்றி... என்னோட கவிதையை பத்தி எதுவும் சொல்லலையே.... உங்கள மாதிரி சீனியர் எதாவது சொன்னாதானே.... எங்களுக்கு ஊக்கமா இருக்கும்.. இல்ல திருத்திக்க முடியும்...

    பதிலளிநீக்கு
  7. தமிழை வாழ்த்திய தமிழரே வாழ்க..
    தொடர்க நண்பரே..

    பதிலளிநீக்கு
  8. நன்றி.. நண்பர் அண்ணாமலைக்கு.. உங்களை பற்றிய விவரங்களை கூட கவிதையாய் வரைந்திருகிறீர்கள்.....

    பதிலளிநீக்கு
  9. வெளியூர்காரனை எல்லாம் சீனியர் என்று நீங்கள் சொல்லுவதை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை தோழரே(ஆனால் சுறா விமரிசனத்திற்கு பின் ஏற்றுகொள்ளலாம் போல தோன்றுகிறது )

    பதிலளிநீக்கு