வியாழன், 1 மார்ச், 2018

முடி கொட்டும் பிரச்சனைக்கு 30 நாட்களில் தீர்வு தரும் ஆளி விதை ஜெல்

ஆளி விதையை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஜெல்லை தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால்  உச்சந்தலையில் உள்ள மயிர்க்கால்கள் தூண்டப்பட்டு இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.மேலும் இது மயிர்க்கால்களை வலுப்படுத்தி ,மயிர்க்கால்களில் உள்ள அடைப்புகளை நீக்கி ,முடி கொட்டுதலை தடுத்து இயற்கையான முறையில் அடர்த்தியான முடியை  பெற உதவுகிறது.ஆளி விதையில் உள்ள ஒமேகா 3பேட்டி ஆசிட் , முடியின் வறட்சி தன்மையையும், முடியின்  ஊட்டச்சத்து குறைபாட்டையும் சரி செய்து ,முடி உதிர்வை கட்டுப்படுத்தி ,முடியினை நீண்டு வளர செய்கிறது.ஆளி விதை ஜெல்லானது முடி உதிர்வை சரி செய்வதுடன் ,பொடுகை  கட்டுப்படுத்தி, தலையில் ஏற்படும் வழுக்கை பிரச்சினையையும் சரி செய்கிறது.மேலும் இந்த ஜெல்லானது முடி வளர்ச்சி குறைபாட்டின் ஒழுங்கற்ற தன்மைகளான பொடுகு ,வறட்சி,நுனி பிளவு போன்றவற்றிற்கு நிரந்தர தீர்வாக அமைகின்றது.                                                                                                                   ஆளி விதை ஜெல் தயாரிக்கும் முறை:                                                                                       தேவையான பொருட்கள்;
 
ஆளி விதை -1/2 கப்
தண்ணீர்-2கப்

            ஒரு பாத்திரத்தில் 2கப் தண்ணீருடன்  1/2கப் ஆளி விதையை  சேர்த்து குறைந்த தீயில் 3 நிமிடம் வரை நன்றாக கொதிக்க வைக்கவும். இந்த கலவை நன்றாக கொதிக்கும் போது அதிலிருந்து முட்டையின்  வெள்ளை கருவை போன்றதொரு ஜெல் உருவாகும். இந்த நிலையில்  வடிகட்டியை பயன்படுத்தி அந்த ஜெல்லை வேறொரு பாத்திரத்தில் வடிகட்டவும். ஜெல் நன்றாக ஆறிய பின்
அதை ஒரு டப்பாவில் அடைத்து  ஒரு மாதம் வரை ப்ரிட்ஜ்ல் வைத்து  உபயோகிக்கலாம்.

பயன்படுத்தும் முறை:
     ஜெல் -4 கரண்டி
    தேங்காய் எண்ணெய் - 4 கரண்டி    
   
    ஒரு பவுலில்  ஜெல்லையும் ,தேங்காயெண்ணையும் சம பங்கெடுத்து நன்றாக கலக்கி  தலையில் நன்றாக தடவி மசாஜ் செய்யவும். மேற்கூறிய அனைத்தும் எனது அனுபவத்தில் நான் அடைந்த அனுபவ பலன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக